விழி பற்றிய குறிப்பு


Buy this Course

“விழி அகாடமி பற்றிய விழிப்புணர்விற்காக…”

விழி அகாடமி, பயிற்சியில் வேட்கை கொண்ட தொழில் வல்லுநர்களின் எண்ணத் தோன்றல்தான் விழி அகாடமி. துறைசார்ந்த தொழில்வல்லுநர்கள் மற்றும் தலைசிறந்த பயிற்சியாளர்களின் கூட்டு குடும்பமே விழி அகாடமி. குழந்தை, சிறுவர், வளர் இளம் பருவம், இளையோர், நடுத்தர வயது முதுமை என பல்வேறு நிலைகளை கொண்ட மனித வாழ்க்கை அனைவருக்கும் பொதுவானது. இந்நிலைகளை அனைவரும் பொதுவாக கடந்தாலும் வாழ்வில் வெற்றி என்பது ஒவ்வொரு நிலையிலும் நாம் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பதனை பொறுத்ததே. நம் புற விழி பொதுவான பார்வையை கொடுத்தாலும் நம் அகவிழி வாழ்வியல் விழிப்புணர்வினை வழங்குகிறது. நம் அகவிழியால் தன்னை அறிந்து வாழ்வியல் வெற்றிக்கான விழிப்புணர்வு பெற வாழ்க்கை சக்கரத்தின் எல்லா நிலையிலும், சிறுவர் முதல் முதியவர்வரை, மாணவர் முதல் தொழில் முனைவோர் வரை, காதலர் முதல் குடும்பம் வரை வேலை தேடுவோரிலிருந்து சமூக சேவை செய்வோர் வரை அனைவருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் அந்த நிலைகளையும் அடுத்தடுத்த நிலைகளையும் வெற்றிக்கரமானதாக மாற்ற அத்துறை சார்ந்த வல்லுநர் மற்றும் தலைசிறந்த பயிற்சியாளரை கொண்டு விழி அகாடமி பயிற்சி அளிக்கிறது. ஆழ்ந்த அறிவை ஆழமான ஆணிவேராக மாற்ற விழியின் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தோடு அழகுத் தமிழிலும்.

எளியோரின் கனவுகளை நனவாக்கும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ / மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சி எங்களின் சமூக பொறுப்பு என்பது எம் தேச முன்னேற்றத்தில் எமது சிறு பங்களிப்பு.

துறை சார்ந்த வல்லுநர்கள்+தலைசிறந்த பயிற்சியாளர்கள் = விழி அகாடமியின் முறையான பயிற்சி.
விழி அகாடமியின் முறையான பயிற்சி + முயற்சி = தொடர் வெற்றி.

நோக்கம்

ஒவ்வொரு தனிமனிதரும் வெற்றிகரமான, பொருள் பொதிந்த வாழ்க்கை வாழும்படி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குதல்!

செயல் முறை

உறுதியான அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால், நன்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டங்களால், வாழ்திறன்களை அனைவருக்கும் வழங்குவது.!

இணையவழிப் பயிற்சி வகுப்புகள்

  • காதலர்கள்
  • மூத்த குடிமக்கள்
  • சமூக சேவகர்கள்
  • இளம் தொழிலதிபர்கள்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."

படக் காட்சி